மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கான எதையும் திமுக அரசு நிறைவேற்றவில்லை... பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேச்சு...

மூளையை பயன்படுத்தி மக்களுடைய வாழ்க்கை முன்னேற்றத்திற்கான எந்த தேர்தல் வாக்குறுதியும் திராவிட முன்னேற்றக் கழகம் நிறைவேற்றவில்லை என பிஜேபி கட்சி தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கான எதையும் திமுக அரசு நிறைவேற்றவில்லை... பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேச்சு...

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே மொளச்சூர் பகுதியில் பிஜேபி வேட்பாளர் பாபுவை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை பிரசாரம் மேற்கொண்டார் அப்போது அவர் பேசியதாவது,

தமிழகத்தில் ஜல் ஜீவன் திட்டத்தில் இணைப்பு பெறுவதற்கு இரண்டாயிரம் பத்தாயிரம் என கமிஷன் வாங்குகிறார்கள். திமுக தேர்தலுக்கு முன்பு அளித்த தேர்தல் வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றி இருக்கிறதா என மக்கள் சிந்திக்க வேண்டும். பெண்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் ஆயிரம் ரூபாய் தொடங்கி,கல்விக் கடன் தள்ளுபடி , சிலிண்டர் இலவசம் என எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை பிறகு எதற்காக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம் என முதல்வர் கூறுகிறார்.

மூளையை பயன்படுத்தி மக்களுடைய வாழ்க்கை முன்னேற்றத்திற்கான எந்த தேர்தல் வாக்குறுதியும் திராவிட முன்னேற்றக் கழகம் நிறைவேற்றவில்லை. பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரை அனைத்து சமூகத்தையும் அரவணைத்துச் செல்லக் கூடிய கட்சி. முத்தலாக் சட்ட திருத்தங்களை கொண்டு வந்தது பாரதிய ஜனதா கட்சி இஸ்லாமிய சகோதரிகளுக்காக இத்திட்டம் கொண்டு வரப்பட்டது எனவே அவருக்கு நன்றிக்கடன் செலுத்த வேண்டியது நமது கடமை அதிமுக வுடன் பரஸ்பரமாக மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என கூட்டணியில் இருக்கிறோம் காங்கிரஸ் திமுக கட்சியை போன்ற சந்தர்ப்பவாத கூட்டணி கிடையாது என்றார்.