தமிழகத்தில் தாமரையை மலர வைத்துவிட்டேன்... ஸ்டாலின், உதயநிதியை வேல் ஏந்த வைத்துவிட்டேன்.. எல்.முருகன் பேச்சு

தமிழகத்தில் ஒரு மாற்றத்தை பாரதிய ஜனதா கட்சி ஏற்படுத்தியருக்கிறது என்று பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் தாமரையை மலர வைத்துவிட்டேன்... ஸ்டாலின், உதயநிதியை வேல் ஏந்த வைத்துவிட்டேன்.. எல்.முருகன் பேச்சு
Published on
Updated on
1 min read
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் மாநில தலைவர் எல்.முருகன் தலைமையில் கமலாலயத்தில் காணொளி மூலம் நடைபெற்று வருகிறது. இந்த செயற்குழு கூட்டத்தில் பாஜகவின் தமிழக பார்வையாளரான சி.டி ரவி, இணை பார்வையாளர் சுதாகர் ரெட்டி உள்ளிட்ட சில மாநில நிர்வாகிகள் நேரிலும்  மற்ற மாவட்டங்களில் உள்ள செயற்குழு உறுப்பினர்கள் காணொளி மூலமும் பங்கேற்றுள்ளனர்.
தமிழல சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் வெற்றி தோல்வி குறித்தும், மீதமுள்ள மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் போது அதனை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் செயற்குழுக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
செயற்குழு கூட்டத்தில் நிர்வாகிகளிடம் பேசிய  எல்.முருகன் :-
தேர்தலுக்கு  முன் தமிழகத்தில், தாமரை மலராது என்று சொன்னார்கள். ஆனால் இன்று 4 இடங்களில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டசபை சென்றுள்ளனர். அது மட்டுமல்ல, அண்டை மாநிலமான பாஜக புதுச்சேரியில் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது.
தமிழகத்தில் ஒரு மாற்றத்தை பாரதிய ஜனதா கட்சி ஏற்படுத்தியிருக்கிறது. இந்த மாற்றம் ஒவ்வொரு தொண்டரின் உழைப்பு இதேபோல நாம் தொடர்ந்து உழைக்க வேண்டும். ஸ்டாலினும் அவரது மகனும் இறை நம்பிக்கை இல்லாதவர்கள். அவர்கள் கையிலேயே வேல் பிடிக்க வைத்திருக்கிறோம் என பேசியுள்ளார்.
logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com