விரைவில் விசாரிக்கப்படுகிறார் எச்.ராஜா... பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தகவல்
எச்.ராஜா மீது பாஜக நிர்வாகிகள் தெரிவித்த குற்றச்சாட்டு குறித்து விசாரிக்கப்படும் என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.

காவிரி நதிநீர் பிரச்சினையில் திமுக எதிர்கட்சியாக இருந்த போது ரயில் மறியலும், ஆளும் கட்சியாக உள்ள போது கூட்டு பொறியலாக உள்ளது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சாடியுள்ளார்.
கடலூர், திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு உரையாற்றினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பாராளுமன்ற மன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது என்றும் இதில் புதிய யுக்தியாக மற்ற கட்சிகள் 5 ஆயிரம் கொடுத்தால் நான் 50 ஆயிரம் தருவேன் என கிண்டலாக பதிலளித்தார். காவிரி நதிநீர் பிரச்சனை குறித்து பதிலளித்த சீமான், கன்னடர்கள் பாரத மாதாவின் பிள்ளைகள் என்றால், நாங்கள் குப்பையில் இருந்து வந்தவர்களா? என்றும் கர்நாடகம் பக்கத்து மாநிலமா? அல்லது பகை நாடா? என சீமான் கேள்வி எழுப்பினார். அவர்கள் நீர்வளம் அவர்களுக்கு முக்கியம் என்றால், எங்கள் நில வளம் எங்களுக்கு முக்கியம் என்ற முடிவுக்கு வருவோம் என்றார்.
கருணாநிதிக்கும் திமுக அரசின் உரிமைத்தொகைக்கும் என்ன சம்மந்தம் உள்ளது என்று கேள்வி எழுப்பிய அவர், தவறான நிர்வாகம் நடக்க அதனை தேர்வு செய்த மக்களும் தான் காரணம் என்றார்.
கற்றவர் தான் மற்றவர்களுக்கு வழிகாட்ட வேண்டும், படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்றார். அன்று இந்தி தெரியாது போடா என்றவர்கள், இன்று இந்தி தெரியுமா வேலை வாருங்கள் என அழைக்கின்றனர் என குற்றம் சாட்டினார். காவிரி நதிநீர் பிரச்சினையில் எதிர்கட்சியாக இருந்தபோது ரயில் மறியல் செய்த திமுக, ஆளும் கட்சியாக மாறிய நிலையில் தற்போது கூட்டு பொறியலாக உள்ளது என கடுமையாக விமர்சனம் செய்தார்.
இதையும் படிக்க: குன்னூர் விபத்து பிரதமர் குடியரசுத் தலைவர் இரங்கல்!
எந்தவொரு தனிமனிதரையும் விட இயக்கமும் - இயக்கம் அடைய வேண்டிய வெற்றியும்தான் முக்கியம் என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இன்று (01-10-2023), திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், மாவட்டக் கழகச் செயலாளர்கள், தொகுதிப் பார்வையாளர்கள் ஆகியோர் பங்கேற்ற கலந்தாலோசனைக் கூட்டம், காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது.
அதில் திமுக தலைவர் முக ஸ்டாலின் ஆற்றிய உரையில், "பொது முக்கியத்துவம் வாய்ந்த சில கருத்துகளைப் பரிமாறிக் கொண்டு, விரைந்து செயல்பட வேண்டிய காலக்கட்டத்தில் நாம் இருக்கிறோம். அதனால்தான் உடனடியாகக் காணொலி மூலமாக இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நம்மை எதிர்நோக்கி வரும் நாடாளுமன்றத் தேர்தலில் புதுவை உள்ளிட்ட நாற்பது தொகுதியிலும் நாம் வெற்றி பெற வேண்டும். தமிழ்நாட்டில் அடைவது போன்ற வெற்றியை இந்தியா முழுமைக்கும் அடைய வேண்டும் என்பதற்காகத்தான் இந்தியா கூட்டணியை அமைத்துள்ளோம்.
அகில இந்தியக் கட்சிகளும் பல்வேறு மாநிலங்களை ஆளும் கட்சிகளும் - வலுவான மாநிலக் கட்சிகளும் - இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ளன. பாரதீய ஜனதா கட்சி ஒன்றியத்தில் ஆட்சி அமைக்க முடியாது; இந்தியா கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் என்ற கருத்து பரவலாக ஏற்பட்டு விட்டது. எனவே, இந்த நேரத்தில் நமது பொறுப்பும் கடமையும் அதிகமாகி உள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் பணியை கடந்த ஆறு மாதத்துக்கு முன்பே நாம் தொடங்கினோம். நமது வெற்றிக்கு அடித்தளமாக விளங்கக்கூடிய வாக்குச்சாவடி பொறுப்பாளர்களை நியமித்தோம். இதுவரையில் அவர்களுக்கான மூன்று பயிற்சி பாசறைக் கூட்டங்கள், தேர்தல் சிறப்பு மாநாடுகளைப் போல நடந்துள்ளன. அடுத்ததாக வடக்கு மண்டல பயிற்சி பாசறைக் கூட்டம் திருவண்ணாமலையிலும், சென்னை மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை கூட்டமும் நடைபெறவுள்ளது.
இந்தப் பயிற்சி பாசறைக் கூட்டங்களில் நாம் எடுத்துச் சொன்னதைச் செயல்படுத்தினாலே போதும். முழுமையான வெற்றியை நாம் அடைந்து விடலாம். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் புதுவை உள்ளிட்ட 39 தொகுதிகளை வென்றோம் என்றால், நடக்க இருக்கும் தேர்தலில் 40 தொகுதிகளையும் வென்றாக வேண்டும். எந்தவொரு தனிமனிதரையும் விட இயக்கமும் - இயக்கம் அடைய வேண்டிய வெற்றியும்தான் முக்கியம்" என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், மக்கள் நன்றாக இருக்கிறார்கள். அதனை வாக்குகளாக மாற்றுவதற்கு உழையுங்கள். உழைப்பும் செயல்பாடும்தான் வெற்றியைப் பெற்றுத் தரும். திட்டமிட்டு உழையுங்கள். தி.மு.க. கூட்டணி அனைத்துத் தொகுதியிலும் வெற்றி பெற உழையுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.
இதையும் படிக்க: குன்னூர் விபத்து பிரதமர் குடியரசுத் தலைவர் இரங்கல்!
காவிரி நீர் விவகாரம் தொடர்பாக ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய தமிழக வாழ்வுரிமை கட்சியினர் 870பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
காவிரி நீரை தமிழகத்திற்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகாவில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், இந்த விவகாரத்தில் மத்திய அரசு மவுனம் சாதிப்பதை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக காவிரி நீரை தமிழகத்திற்கு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க கோரியும், உரிய நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்தும், தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில துணை பொதுசெயலாளர் வேணுகோபால் தலைமையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர்.
இதை தொடர்ந்து நேற்று சின்னமலை பகுதியில் இருந்து வேல்முருகன் தலைமையில் அக்கட்சியினர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர். இதையடுத்து அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால், இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து வேல்முருகனை கைது செய்த போலீசார் அங்கிருந்த அனைவரையும் அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில துணை பொதுசெயலாளர் வேணுகோபால் உட்பட 870 பேர் மீது கிண்டி போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். சட்டவிரோதமாக கூடுதல், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துதல் உட்பட மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
இதையும் படிக்க: குன்னூர் விபத்து பிரதமர் குடியரசுத் தலைவர் இரங்கல்!
என்எல்சி சுரங்க விரிவாக்கப் பணி வளையமாதேவியில் மக்கள் எதிர்ப்பால் திரும்பி சென்ற அதிகாரிகள்.
கடலூர் மாவட்டம், சேத்தியாதோப்பு அருகே உள்ள வளையமாதேவி கிராமத்தில் பல நாட்களுக்குப் பிறகு என்.எல்.சி இரண்டாவது சுரங்க விரிவாக்கப் பணியில் தற்போது நிலம் மனைகளை என்எல்சி அதிகாரிகள் ஜேசிபி எந்திரங்கள் மூலம் தற்போது சமன் செய்து வருகிறார்கள். இந்நிலையில் இதனை அறிந்த வளையமாதேவி கிராம மக்கள், விவசாயிகள் பலர் பணி நடைபெறும் இடத்தில் ஒன்று திரண்டனர்.
அப்போது கைப்பற்றப்பட்ட இடங்களுக்கு இன்று வரை முழுமையான இழப்பீடு வந்து சேரவில்லை. வாழ்வாதார பாதுகாப்பும் கிடைக்கவில்லை. வீட்டில் ஒருவருக்கு நிரந்தர வேலை இல்லை. தற்போது இந்த பகுதியிலேயே இன்னமும் கைப்பற்றப்பட்ட இடங்கள் 100 ஏக்கருக்கு மேல் இருக்கிறது அதற்கான எந்தவிதமான நிவாரணமும் இன்னும் கிடைக்கவில்லை. அதனால் எங்களுக்கு சேர வேண்டிய இழப்பீட்டை தந்து விட்டு நீங்கள் பணியை துவக்குங்கள். நாங்கள் அதிகாரிகள் பணி செய்வதை தடுக்கவில்லை என விவசாயிகள் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இருந்த போதிலும் ஜேசிபி எந்திரங்கள் மூலம் மேடான பகுதிகள் தொடர்ந்து சமன்படுத்தப்பட்டது. இதற்காக போலீசரும் குவிக்கப்பட்டனர். பிறகு ஒரு மணி நேரத்திற்கு பிறகு விவசாயிகள் கிராம மக்களின் கோரிக்கைப்படி பேச்சு வார்த்தைக்கு பிறகு விரிவாக்க பணி மேற்கொள்ளப்படும் என்று நடைபெற்ற பணியை அதிகாரிகள் நிறுத்தினர்.
ஆனாலும் அங்கே கூடி இருந்த கிராம மக்கள் விவசாயிகளும் நீங்கள் தற்போது இப்படித்தான் கூறுவீர்கள் ஆனால் மீண்டும் எங்களது கவனத்தை திசை திருப்பிவிட்டு உங்களது பணியை மேற்கொள்வீர்கள். அதனால், எங்களுக்கு இழப்பீடு கொடுத்து விட்டு நீங்கள் எந்த வேலையும் செய்யலாம். அதற்கு நாங்கள் தடை சொல்லவில்லை என்ற பிறகு வேறு வழியில்லாமல் ஜேசிபி எந்திரங்களையும் மற்றும் அதிகாரிகள் வந்த ஜீப்பும் திரும்பிச் சென்றது. இருந்தபோதிலும் இப்பகுதி விவசாயிகளும் கிராம மக்களும் இன்னமும் இழப்பீடு பெறவில்லை. என்பது முழுமையாக நிரூபணம் ஆகிறது ஆனால் என்எல்சி நிர்வாகமும் நாங்கள் இழப்பீடு தந்து விட்டோம் என்று கூறுகிறது.
இது குறித்து விவசாயிகள் மேலும் தெரிவிக்கும் போது என்எல்சி நிர்வாகம் வேண்டும் என்று பொய் கூறுகிறது. எங்களைப் பழிவாங்குகிறது. நாங்கள் எங்களுடைய வாழ்வாதார பயன்பாடு கிடைத்துவிட்டால் நாங்கள் ஏன் பணிகளை தடுக்க போகிறோம் என்று தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க: குன்னூர் விபத்து பிரதமர் குடியரசுத் தலைவர் இரங்கல்!
தமிழ்நாடு அரசியல் சூழல் தொடர்பாக பாஜக மேலிடத் தலைவர்களை சந்தித்து விளக்கம் அளிப்பதற்காக டெல்லி செல்வதாக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் பாஜக - அதிமுக கூட்டணி முறிந்த நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் இருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
முன்னதாக கோவை விமான நிலையத்தில் பேட்டியளித்த அண்ணாமலை, என் மண் என் மக்கள் நடைபயணத்தின் 3வது பயணம் தொடர்பாக பாஜக மேலிடத் தலைவர்களை சந்திக்க டெல்லி செல்வதாக குறிப்பிட்டார். தமிழ்நாட்டின் அரசியல் சூழல் தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தச் உள்ளதாகவும் அவர் கூறினார்.
நடைபயணத்தில் திமுகவுக்கு எதிராக பல்வேறு புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும் அண்ணாமலை குறிப்பிட்டார். தமிழ்நாட்டில் யாருடன் கூட்டணி என்பதை பாஜக தலைமை உரிய நேரத்தில் அறிவிக்கும் எனவும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். அரசியலில் யாரையும் அணுசரித்து செல்லும் அவசியம் தனக்கு இல்லை எனவும் அண்ணாமலை ஆவேசமாக கூறினார்.
மேலும் அடிப்படையில் தாம் ஒரு விவசாயி என்றும் பிறகு தான் அரசியல்வாதி என அண்ணாமலை கூறினார். முன்னதாக பாஜக தலைவர் பதவியில் இருந்து தங்களை நீக்க வாய்ப்புள்ளதா? என கேள்வி எழுப்பிய செய்தியாளர்களுடன் அண்ணாமலை வாக்குவாதம் செய்ததால் சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.
இதையும் படிக்க: குன்னூர் விபத்து பிரதமர் குடியரசுத் தலைவர் இரங்கல்!