”தென் மாநிலங்களை போல்...வட மாநிலங்களிலும் பாஜக புறக்கணிக்கப்படும்...” அமைச்சா் சாமிநாதன்!

”தென் மாநிலங்களை போல்...வட மாநிலங்களிலும் பாஜக புறக்கணிக்கப்படும்...” அமைச்சா் சாமிநாதன்!

தென் மாநிலங்களில் பாஜக புறக்கணிக்கப்பட்டது போல் வட மாநிலங்களிலும் புறக்கணிக்கப்படும் காலம் விரைவில் வரும் என அமைச்சா் சாமிநாதன் தொிவித்துள்ளாா். 

கோவை மாநகராட்சி சிறைச்சாலை அணி வகுப்பு மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசு பொருட்காட்சியை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் திறந்து வைத்து பார்வையிட்டார். குறிப்பாக அங்கு காவல்துறையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரங்கை பார்வையிட்ட அவர் அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த துப்பாக்கி, உட்பட நவீன கருவிகளை பார்வையிட்டு அதன் பயன்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் இந்நிகழ்வில் பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இதையும் படிக்க : கர்நாடக முதலமைச்சர் யார்? வாய்ப்பு அதிகம் இருப்பது யாருக்கு? சித்தராமையாவா (அ) சிவகுமரா...

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  தென் மாநிலங்களில் பாஜக புறக்கணிக்கப்பட்டது போல் விழிப்புணர்ச்சி ஏற்பட, ஏற்பட வட மாநிலங்களிலும் அந்த சூழல் ஏற்படும் என தொிவித்தாா். தொடா்ந்து பேசிய அவா், திமுக அறிவித்த மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை கா்நாடக தோ்தலில் காங்கிரஸ் கட்சி முன்னெடுத்ததாலே வெற்றி பெற்றது எனவும் குறிப்பிட்டாா்.