கிரிவலப் பாதையில் அடிப்படை வசதிகள் தயார் - அமைச்சர் எ.வ. வேலு

Published on

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் 99 சதவீதம் தயார் நிலையில் உள்ளதாக பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலையில் கடந்த 17-ந் தேதி கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், வரும் 26-ந் தேதி மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.

சுமார் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தீபத் திருவிழாவிற்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், 14 கிலோ மீட்டர் தொலைவிலான கிரிவலப் பாதையில் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு, திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் 99 சதவீதம் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.  

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com