1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது உறுதி... மறுபரிசீலனை செய்யப்படாது - அன்பில் மகேஷ்...

தமிழகத்தில் நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது உறுதி என்றும், மறுபரிசீலனை செய்யப்படாது எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 
1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது உறுதி... மறுபரிசீலனை செய்யப்படாது - அன்பில் மகேஷ்...
Published on
Updated on
1 min read

திருச்சியில் 75வது ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி, மத்திய பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரக  விழிப்புணர்வு இயக்கம் சார்பில் மினி மாரத்தான் போட்டியை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவக்கி வைத்தார்.

இதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், பள்ளிகளை திறப்பது குறித்து அனைத்து மாவட்டங்களில் உள்ள முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களிடம் ஆலோசனை நடத்தி முதலமைச்சரிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக தெரிவித்தார்.

மருத்துவத்  நிபுணர்களிடம் ஆலோசனை நடத்தி அதற்கு பிறகு தான் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் உத்தரவிட்டார் என விளக்கமளித்தார். எனவே நவம்பர் 1ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பதில் எந்தவித மாற்றமும் இல்லை என கூறினார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com