மாட்டிறைச்சி விற்க கூடாது,..மிரட்டல் விடுத்த வட்டாட்சியர் பணியிட மாற்றம்.! 

மாட்டிறைச்சி விற்க கூடாது,..மிரட்டல் விடுத்த வட்டாட்சியர் பணியிட மாற்றம்.! 

Published on

மாட்டிறைச்சி விற்க கூடாது என்று எச்சரிக்கை விடுத்த வட்டாட்சியர் தற்போது பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

திருப்பூர் மாவட்டம்.அவிநாசியில்  மாட்டிறைச்சி விற்க கூடாது என அவிநாசி வட்டாட்சியர் மாட்டிறைச்சி கடை உரிமையாளரிடம் எச்சரிக்கை விடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர். 

அதைத் தொடர்ந்து வட்டாட்சியரை கண்டித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளை ஒன்றிணைந்து உணவு உரிமைக்கான மக்கள் கூட்டமைப்பு சார்பாக அவிநாசி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அவிநாசி வட்டாட்சியர் ஊத்துக்குளிக்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com