பீப் பிரியாணி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த தமிழக அரசு...!

பீப் பிரியாணி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த தமிழக அரசு...!

சென்னை தீவுத்திடலில் நடைபெற்று வரும் சிங்காரச்சென்னை உணவுத் திருவிழாவில் இன்று முதல் பீப் பிரியாணி இடம்பெற உள்ளது.

சிங்காரச்சென்னை உணவுத் திருவிழா:

பழைய பாரம்பரிய உணவுகளை அனைவருக்கும் நினைவு கூர்வதற்காக வைக்கப்படும் நிகழ்ச்சி தான் இந்த உணவு திருவிழா. அதன்படி சிங்காரச் சென்னை உணவுத்திருவிழா சென்னை தீவித்திடலில் 12, 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி 12.08.2022 ஆம் தேதியான நேற்று சென்னை உணவுத்திருவிழா தொடங்கியது.

தொடங்கி வைத்த சுகாதாரத்துறை அமைச்சர்:

தமிழக உணவுப் பாதுகாப்புத்துறை சார்பில் சிங்காரச்சென்னை உணவுத் திருவிழாவை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார். நேற்று தொடங்கப்பட்ட உணவு திருவிழா, 200 அரங்குகளுடன் கூடிய உணவுகளுடன் கோலாகலமாக நடைபெற்றது. 

சர்ச்சை:

கோலாகலமாக நடைபெற்று வரும் உணவு திருவிழா, நாளை வரை நடைபெறவிருக்கும் நிலையில், பீப் பிரியாணி அரங்கு ஏன் இல்லை என்ற சர்ச்சையானது எழுந்தது. 

விளக்கமளித்த மா.சுப்பிரமணியன்:

சென்னை தீவுத்தடலில் நேற்று முதல் நடைபெற்று வரும் உணவுதிருவிழாவில், பீப் பிரியாணி இடம்பெறாததால் ஏற்பட்ட சர்ச்சைக்கு, அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார். “நான் கூட பீப் உண்பவன் தான், ஆனால், பீப் உணவகத்துக்கு யாரும் விண்ணப்பிக்காததால் திருவிழாவில் பீப் இடம்பெறவில்லை” என தெரிவித்திருந்தார். 

இன்று இடம்பெற்ற பீப் பிரியாணி:

நேற்று நடைபெற்ற உணவுத்திருவிழாவில் பீப் பிரியாணி இடம்பெறாததால், சர்ச்சை எழுந்தது. இந்த சர்ச்சையை அடுத்து, அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கமளித்தார். இந்நிலையில், சென்னை உணவுத்திருவிழாவில் இன்று முதல் பீப் பிரியாணி இடம்பெற்றுள்ளது. அதன்படி இன்று முதல் சுக்குபாய் பிரியாணி அரங்கில் மாட்டிறைச்சி பிரியாணி விநியோகிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

பீப் பிரியாணிக்கு முற்றுப்புள்ளி வைத்த சென்னை உணவுத்திருவிழா:

முன்னதாக, திருப்பத்தூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் நடைபெற்ற உணவுத் திருவிழாவில் பீப் பிரியாணி இடம்பெறாதது மிக பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் சென்னை உணவுத் திருவிழாவிலும் பீப் பிரியாணி இடம்பெறாமல் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சென்னை தீவுத்திடலில் இன்று நடைபெற்ற சிங்காரச் சென்னை உணவுத் திருவிழா 2022-ல் பிப் பிரியாணி இடம்பெற்றுள்ளது.