எங்கள் திரைத்துறையை விட்டுவிடுங்கள்... உங்கள் தகுதிக்கு நீங்கள் இங்கு வரவேண்டாமே..அன்புமணிக்கு பாரதிராஜா வேண்டுகோள்

தங்கள் தமிழ் திரைத்துறையை விட்டு விடுங்கள் என  பாட்டாளி மக்கள் கட்சிக்கு இயக்குனர் பாரதி ராஜா வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

எங்கள் திரைத்துறையை விட்டுவிடுங்கள்...  உங்கள் தகுதிக்கு நீங்கள் இங்கு வரவேண்டாமே..அன்புமணிக்கு பாரதிராஜா வேண்டுகோள்

ஜெய்பீம் படம் தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சி இளைஞரணி தலைவர் அன்புமணிக்கு இயக்குகர்“ பாரதிராஜா எழுதியுள்ள கடிதத்தில்,திரைத்துறை என்பது எல்லாவற்றையும் பேசக்கூடியது எனவும்  பல சமூக மாற்றங்களின் பங்களிப்பாக சினிமா இருந்திருக்கிறது எனவும்  குறிப்பிட்டுள்ளார். 

ஒரு படைப்பாக நடிகர் சூர்யா  தயாரிப்பில் வெளி வந்த ஜெய்பீம் திரைப்படம் வரவேற்கப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ள பாரதிராஜா,

இதை படைப்பாக மட்டுமே பார்க்க முயன்றால் தாங்களும் தங்கள் தந்தையும் போராடும் அதே எளியவர்களுக்கான போராட்டம் தான் இது என்றும் தம்பி சூர்யா யாரையும் காயப்படுத்தும் தன்மை கொண்டவரல்ல என்றும்  கூறியுள்ளார். 


ஒரு படைப்பின் சுதந்திரத்தை அதன்படியே விட்டு விடுவது இன்னும் அதிகமான நல்ல படைப்புகளை கொண்டுவர உதவும் என கூறியுள்ள பாரதிராஜா, சினிமாவை விட கவனம் செலுத்த வேண்டிய வேலைகள் அதிகம் இருப்பதாகவும்,தங்கள் தகுதிக்கு இங்கு வரவேண்டாமே என்றும் அறிவுறுத்தி உள்ளார்.


இதே நிலை தொடர்ந்தால்  ஒவ்வொரு அரசியல்வாதிகளின் வாசல்களிலும் ,தங்கள் படைப்பளிகள் கதை சொல்ல காத்திருக்க வேண்டுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது என கவலை தெரிவித்துள்ள பாரதிராஜா ,

ஜெய்பீம் படத்தில் தாங்கள் கேட்டுக்கொண்ட மாற்றங்கள்  செய்யப்பட்டுள்ளதையும், தங்கள் கருத்துகளை எப்போதும் செவிகொடுத்து கேட்கும் 
மன நிலையில் உள்ள மனிதனுடன் ஏன் தேவையற்ற வார்த்தைப்போர் என்றும் அன்புமணிக்கு  வினவியுள்ளார்.