காந்தி ஜெயந்தி: உலக அமைதியை வலியுறுத்தி மிதிவண்டி பேரணி!

காந்தி ஜெயந்தி: உலக அமைதியை வலியுறுத்தி மிதிவண்டி பேரணி!
Published on
Updated on
1 min read

மகாத்மா காந்தியின் 154-வது பிறந்த நாளை முன்னிட்டு, உலக அமைதியை வலியுறுத்தி தமிழக அரசின் சார்பில் மிதிவண்டிப் பேரணி நடைப்பெற்றது.

மிதிவண்டி பேரணி:

சென்னை காமராசர் சாலையில், உத்தமர் காந்தியடிகள் 154-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் மிதிவண்டி பேரணி நடைபெற்றது. இந்த மிதிவண்டி பேரணியை செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர் மா.சுப்புரமணியன், சேகர் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

தீண்டாமை ஒழிப்பு, தேசிய ஒருமைப்பாடு, உலக அமைதி, மத நல்லிணக்கம் ஆகியவற்றை வலியுறுத்தும் விதமாக நடைபெற்ற இந்த மிதிவண்டி பேரணியில், சுமார் 350க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முதலில் இந்தப் பேரணியானது காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலையிலிருந்து தொடங்கி  அடையார் காந்தி மண்டபம் வரை நடைபெற்றது.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சாமிநாதன், தமிழக அரசின் சார்பாக அரசு விழா கடைபிடிக்கும் வகையில், எழும்பூர் அருங்காட்சியத்தில் ஆளுநர் ரவி மற்றும் முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் காந்தி திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள் என்பதை தெரிவித்தார். மேலும், 
உலக அமைதியை கடைபிடிக்கும் வகையில் இந்த பேரணி நடைபெற்றது என்றும், இந்த பேரணியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர் என்றும் கூறினார். அதுமட்டுமின்றி, சுதந்திர தினத்தன்று தமிழக அரசு சார்பில் காந்திக்கு புதிய சிலை வைக்கப்பட்டது என்பதையும் சுட்டிக்காட்டி பேசினார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com