2 ஆண்டுகளுக்கு பிறகு படகு சவாரி துவக்கம்...மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்..!

பக்ரீத் பண்டிகை விடுமுறை தினங்கள் என்பதால் குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது.

2 ஆண்டுகளுக்கு பிறகு படகு சவாரி துவக்கம்...மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்..!

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சீசன் களைகட்ட துவங்கி உள்ளது. இதனால் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம், புலியருவிகளில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டுகிறது. நேற்றும் இன்றும் பக்ரீத் பண்டிகை விடுமுறை என்பதால் சுற்றுலாத் தலமான குற்றாலம் அடுத்த ஐந்து அருவிக்கு சுற்றுலா பயணிகள் படையெடுக்க தொடங்கினர். 

ஐந்தருவியில் ஐந்து கிளைகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதனால் குற்றாலம் மெயின் அருவியை விட ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் காலை முதலே அலைமோதியது. இதே போன்று பழைய குற்றாலம் அருவி, மெயின் அருவிகளில் குளித்து மகிழ சுற்றுலா பயணிகள் பல்லாயிரம் பேர் குவிந்துள்ளனர்.

மேலும் குற்றாலம் ஐந்தருவி சாலையில் உள்ள வெண்ணமடை படகு குழாமில், 2 ஆண்டுகளுக்கு பிறகு இன்று படகு சவாரியை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகாஷ், பழனி நாடார் எம்.எல்.ஏ. ஆகியோர் துவக்கி வைத்தனர். இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் படகு சவாரி செய்து தங்களது விடுமுறை நாட்களை இனிதே கழித்து வருகின்றனர்.