விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல்! துபாய் விமானம் தாமதம்!!!

விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல்! துபாய் விமானம் தாமதம்!!!

துபாய்க்கு செல்ல இருந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் வந்ததால், பதறிய அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
Published on

இன்று, தனது குடும்ப உறுப்பினர்கள் வெளியூர் செல்வதைத் தடுக்க விரும்பிய போதை ஆசாமி ஒருவர், துபாய் செல்லும் தனியார் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார். பின், போலீஸ் வலையில் சிக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ரஞ்சித் குமார் என்பவர் தனது சகோதரி குடும்பத்தை துபாய் அனுப்பி வைப்பதற்காக சென்னை விமான நிலையம் சென்றுள்ளார். ஆனால் சகோதரி உடனான தகராறு காரணமாக, துபாய் விமானத்தில் அவர் ஏறியதும், விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக ரஞ்சித்குமார் விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு விமானம் முழுவதும் சோதனை நடத்தப்பட்டது. 

நகரவாசி தனது குடும்ப உறுப்பினர்கள் இருவர் துபாய்க்கு பறப்பதைத் தடுக்க விரும்பினார் மற்றும் நகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் அழைப்பு விடுத்தார், முதலில் 7.20 மணிக்கு புறப்படவிருந்த இண்டிகோ விமானத்திற்குள் முழு அளவிலான தேடலைத் தொடங்க பாதுகாப்பு நிறுவனங்களைத் தூண்டியதாக இன்று காலை, விமான நிலைய அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த மிரட்டல் அழைப்பைத் தொடர்ந்து, விமானத்தில் வெடிகுண்டுகள் ஏதும் புதைக்கப்பட்டிருக்கிறதா என்பதை அறிய, பாதுகாப்பு ஏஜென்சிகளால் முழுமையான சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும், விமானத்தில் அத்தகைய பொருட்கள் எதுவும் காணப்படவில்லை. இதனால் சற்று பதற்றம் தனிந்தது.

இதற்கிடையில், தனது உறவினர்கள் துபாய்க்கு பறப்பதைத் தடுக்க விரும்பிய ஒருவர் தான் மது போதையில் இப்படி ஒரு வேலை செய்திருக்கிறார் என கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவர் உடனடியாக காவல்துறையால் அழைத்துச் செல்லப்பட்டார்.

போலியான இந்த மிரட்டலால், துபாய்க்கு செல்ல இருந்த விமானம், ஒரு நாள் தாமதாமகியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், விமானத்தில் இருந்த சுமார் 180 பயணிகள் மற்றும் பணியாளர்களுக்கு தங்குமிடம் வழங்கப்பட்டது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com