அதிமுக ஆட்சியில் இல்லை...ஆனால் திமுக ஆட்சியில் தீவிரவாதம் சாதாரணமாகிவிட்டது!

அதிமுக ஆட்சியில் இல்லை...ஆனால் திமுக ஆட்சியில் தீவிரவாதம் சாதாரணமாகிவிட்டது!
Published on
Updated on
1 min read

அதிமுக ஆட்சியில் இல்லாத வெடிகுண்டு, வன்முறை மற்றும் தீவிரவாத கலாச்சாரம் திமுக அரசு அமையும் போது சாதாரணமாக தலைதூக்குவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

தேவர் சிலைக்கு ஜெயக்குமார் மரியாதை:

முத்துராமலிங்க தேவரின் 115 ஆவது ஜெயந்தியை முன்னிட்டு, சென்னை நந்தனத்தில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக சார்பில், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர்கள் ஜெயகுமார், மா பா பாண்டியராஜன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயகுமார், தேசியமும் தெய்வீகமும் இரு கண்கள் என்ற கொள்கையோடு இன்றும் அனைவரின் மனதில் வாழும் தேவர் பெருமாகனார் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் புகழஞ்சலி செலுத்தினோம். தேவர் பார்க்காத சிறையே கிடையாது என்று புகழாரம் சூட்டினார்.

திமுக ஆட்சியில் தீவிரவாதம் சர்வசாதாரணமாகியது:

தொடர்ந்து பேசிய அவர், திமுக அரசாங்கம் அமையும் போதெல்லாம் வெடிகுண்டு, வன்முறை தீவிரவாத கலாச்சாரம் சர்வ சாதாரணமாக தலை தூக்குவதாக குற்றம் சாட்டினார். மேலும், இந்த கோவை சம்பவத்தில் 6 இடங்களில் குண்டு வைக்க திட்டமிட்டதாக பத்திரிகைகளில் செய்தி வருகிறது. இதற்கு உளவுத்துறையின் தோல்வியே மிகப்பெரிய காரணம், ஆரம்பகட்ட முதலே அரசு இதை தடுத்திருக்க வேண்டும் என்று தெரிவித்தார். 

மாநில அரசின் சட்டம் மற்றும் ஒழுங்கு யாரிடம் உள்ளது:

கடந்த அதிமுக ஆட்சியில் வன்முறை, துப்பாக்கி கலாச்சாரம் என்பது கிடையாது. ஆனால், திமுக ஆட்சியில் இவையெல்லாம் சர்வ சாதாரணமாக நடக்கும் காரியமாகத் தான் பார்க்க முடிகிறது. மாநில அரசின் சட்டம் மற்றும் ஒழுங்கு யாரிடம் உள்ளது என்று கேள்வி எழுப்பிய ஜெயக்குமார்,  ஒட்டுமொத்த உளவுத் துறையின் தோல்வி தான் கோவை கார் வெடிப்பு சம்பவத்திற்கு காரணம் என்று பகீரங்கமாக கூறியுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com