2 ஆண்டுக்கு பிறகு நெல்லையை நிரப்ப வரும் புத்தகங்கள்.. 10 நாட்களுக்கு 110 அரங்குகள்!! துவக்கப்போவது யார் தெரியுமா?

நெல்லையில் நாளை துவங்கி 10 நாட்கள் நடைபெற உள்ள புத்தக் கண்காட்சியில் 100க்கும் அதிகமான அரங்குகளில் புத்தகங்கள் காட்சிபடுத்தப்படவுள்ளன.

2 ஆண்டுக்கு பிறகு நெல்லையை நிரப்ப வரும் புத்தகங்கள்.. 10 நாட்களுக்கு 110 அரங்குகள்!! துவக்கப்போவது யார் தெரியுமா?

நெல்லை மாவட்டத்தில் இரண்டு ஆண்டு இடைவெளிக்கு பிறகு இந்த வருடம் மீண்டும் புத்தக திருவிழா நடைபெறவுள்ளது. திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் மற்றும் பப்பாசி சார்பில் 5வது முறையாக நடத்தப்படும் இந்த புத்தகத்திருவிழா நாளை தொடங்கி  27-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த புத்தக திருவிழாவை தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்கிறார். 110 அரங்குகளுடன் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள இந்த புத்தக கண்காட்சியில்,  புத்தகங்கள் 10 சதவீத தள்ளுபடியில் விற்பனை செய்யப்படுகின்றன.  

இதில், தாமிரபரணி ஆற்றங்கரை நாகரீகமான ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை அகழாய்வுகள் குறித்த அருங்காட்சியகமும் அமைக்கப்படுகிறது. மேலும் உலகப்புகழ் பெற்ற திரைப்படங்கள் திரையிடப்படும்பட்சத்தில், மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவ மாணவிகளும் இதனை கண்டுகளிப்பதற்கு ஏதுவாக மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.