வரும் கல்வியாண்டிற்குள் அனைத்து பள்ளிகளிலும் கொண்டு வரப்படும்...அமைச்சர் உறுதி!

வரும் கல்வியாண்டிற்குள் அனைத்து பள்ளிகளிலும் கொண்டு வரப்படும்...அமைச்சர் உறுதி!

வரும் கல்வியாண்டிற்குள் அனைத்து பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் கொண்டு வரப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை பாரத சாரண சாரணியர் மாநில தலைமை அலுவலகத்தில் 74-வது குடியரசு தின விழா நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்று தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

இதையும் படிக்க : கடமைப் பாதையில் மூவர்ணக் கொடியை ஏற்றினார் குடியரசுத் தலைவர் முர்மு...

தொடர்ந்து மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட அவர், பாரத சாரண சாரணியர் இயக்கத்தில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு விருதுகள் மற்றும் பதக்கங்களை வழங்கி கவுரவித்தார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நிதி சார்ந்த பிரச்சினைகள் மட்டுமே நிறைவேற்றப்படாமல் உள்ளதாகவும், இதர கோரிக்கைகள்,  நிறைவேற்றப்பட்டுள்ளதால், ஈரோடு இடைத் தேர்தலில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வாக்குகள் கிடைப்பதில் சிக்கல் இருக்காது என்று நம்பிக்கை தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், வரும் கல்வியாண்டிற்குள் அனைத்து பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் கொண்டு வரப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.