முடியலப்பா! கைவரிசை காட்டும் குடிமகன்கள்!!

சென்னை நொளம்பூரில் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து 6 லட்சம் ரூபாய் மதுபாட்டில்களை திருடிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
முடியலப்பா! கைவரிசை காட்டும் குடிமகன்கள்!!
Published on
Updated on
1 min read

சென்னை நொளம்பூரில் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து 6 லட்சம் ரூபாய் மதுபாட்டில்களை திருடிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை முகப்பேர் கம்பர் சாலையில் இயங்கிவரும் மதுபான கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன் பேரில் அங்கு சென்ற போலீசார் விசாரணை நடத்தினர்.அதில் 6லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதுபான பாட்டில்கள் கொள்ளை போனது தெரியவந்தது.இதனையடுத்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் டாஸ்மாக் கடையில் பார் நடத்தி வந்த ராஜா என்பவர் தனது கூட்டாளிகளுடன் கொள்ளை சென்றது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா பரவலையொட்டி கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மதுக்கடைகள் பூட்டியிருப்பதால் ஆங்காங்கே மதுக்கடைகளில் உள்ள மதுபாட்டில்கள் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. எனவே இதனை தடுக்க அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com