கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து- 3 விவசாயிகள் பலி!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பாதி இடிக்கப்பட்ட கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் 3 விவசாயிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து- 3 விவசாயிகள் பலி!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பாதி இடிக்கப்பட்ட கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் 3 விவசாயிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்தியூர் அருகே  தேர் வீதியில் உள்ள மின் சாதன விற்பனைக் கடையை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக அங்கிருந்த கட்டடம் பாதி இடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அந்தியூர் வார சந்தையில் பயறு வகைகளை விற்பனை செய்வதற்காக பர்கூரில் இருந்து வந்த விவசாயிகள் அந்த கட்டிடத்தில் படுத்திருந்ததாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக மீதி கட்டிடமும் இடிந்து விழுந்துள்ளது. இதில் இடிபாடுகளில் சிக்கி 3 பேரும் உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.