ரேக்ளா ரேசில் சீறிப்பாய்ந்த மாடுகள்...ஆரவாரத்துடன் கண்டுகளித்த மக்கள்...!

ரேக்ளா ரேசில் சீறிப்பாய்ந்த மாடுகள்...ஆரவாரத்துடன் கண்டுகளித்த மக்கள்...!

பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ரேக்ளா ரேஸ் எனப்படும் மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடி கிராமத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி, நடைபெறும் மாட்டு வண்டிப் பந்தயம் சிறப்பு பெற்றதாகும். அந்த வகையில், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி, மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது. பெரிய மாடு,  சிறிய  மாடு, பூஞ்சிட்டு என மூன்று பிரிவுகளில் பந்தயம் நடைபெற்றது. இதில், 59 வண்டிகளும், 118 காளைகளும் போட்டியில் பங்கேற்றன. இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்த மாட்டு வண்டிகளை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 

இதையும் படிக்க : அதிமுக ஈபிஎஸ் அணிக்கும்...அமமுகவினருக்கும் இடையே தகராறு...கட்சி கொடியை கிழித்து மோதல்!

இதேபோன்று புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கடியாபட்டியில் மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது. இப்போட்டியை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். மதுரை, கன்னியாகுமரி, தஞ்சை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 35 ஜோடி மாட்டு வண்டிகள் அழைத்துவரப்பட்டு போட்டியில் பங்கேற்றன. 3 சுற்றுகளாக நடைபெற்ற போட்டியில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இப்போட்டியினை ஏராளமான மக்கள் கண்டு களித்தனர்.