மாணவிகளின் கோரிக்கை நிறைவேற்றப்படும்...உறுதியளித்த முதலமைச்சர்!

பேருந்து கட்டண சலுகை, பெண்களுக்கான பொருளாதார தன்னிறைவுக்கு அடித்தளமாக இருக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின்:
சென்னை ராணிமேரி கல்லூரியில் 104-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி கௌரவித்தார். அப்போது பேசிய அவர், பெண்கல்வியின் கலங்கரை விளக்காக ராணிமேரிக் கல்லூரி திகழ்வதாக புகழாரம் சூட்டினார். ராணி மேரிக் கல்லூரியை இடிக்க அப்போதைய அதிமுக அரசு முனைந்ததாக கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இதை எதிர்த்து மாணவிகளுடன் போராட்டத்தில் கலந்து கொண்டதை நினைவு கூர்ந்தார். பெண் வளர்ச்சிக்காக எண்ணற்ற திட்டங்களை திமுக அரசு நிறைவேற்றியிருப்பதாகவும், பேருந்து கட்டண சலுகை, பெண்களுக்கான பொருளாதார தன்னிறைவுக்கு அடித்தளமாக இருக்கும் என்றும் முதலமைச்சர் கூறினார்.
உறுதியளித்த ஸ்டாலின்:
தொடர்ந்து பேசிய அவர், மாணவிகளின் நீண்ட நாள் கோரிக்கையின் படி, ராணி மேரிக் கல்லூரி வளாகத்தில் விடுதி கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அப்போது உறுதியளித்தார்.
370 கிலோ மாருதி காரை 25 மீ. தூக்கி சென்ற இரும்பு மனிதன்!!!
370 கிலோ எடை கொண்ட மாருதி காரை 25 மீட்டர் தூரம் வரை தூக்கிச் சென்று இரும்பு மனிதன் கண்ணன் சாதனை படைத்தார்.
கன்னியாகுமரி | நாகர்கோவில் அடுத்த தாமரைகுட்டிவிளையை சேர்ந்தவர் கண்ணன்.எம்.ஏ. முதுநிலை பட்டதாரியான இவர் மேலகிருஷ்ணன்புதூரில் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு பயிற்சியாளராகவும் இருந்து வருகிறார்.
இவர் ஏற்கனவே ஒன்பதரை டன் எடையுள்ள லாரியை 90 மீட்டர் தூரம் இழுத்து சாதனை படைத்தார். மேலும், பதிமூன்றரை டன் எடையுள்ள லாரியில் கயிறு கட்டி 4 நிமிடத்தில் 111 மீட்டர் தூரம் இழுத்து முந்தைய அவரது சாதனையை அவரே முறியடித்து உலக சாதனை படைத்துள்ளார்.
மேலும் படிக்க | தமிழ்நாடு அரசுத்துறைகளின் சாதனைகளை விளக்கும்...அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு...!
அது மட்டுமின்றி, சுமார் 270 கிலோ எடையுள்ள 2 மோட்டார் சைக்கிளை தனது தோளில் சுமந்தபடி 42 கிலோமீட்டர் நடந்துள்ளார். இதற்கு மேலாக, ஜம்போ சர்க்கஸில் வெளிநாட்டவரின் சவாலை ஏற்று 5 கிலோ இரும்பு உருளையை ஒற்றை கையால் தூக்கி பார்வையாளர்களையும் சர்க்கஸ் சாகச வீரர்களையும் வியக்க வைத்தார்.
இவ்வாறு பல்வேறு சாதனைகளை படைத்து வந்த நிலையில், இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்க மைதானத்தில் வைத்து 370 கிலோ எடை கொண்ட காரை தூக்கி 25 மீட்டர் நடந்து சென்று உலக சாதனை படைத்துள்ளார்.
மேலும் படிக்க | பேசியே உலக சாதனை படைத்த கல்லூாி மாணவன்...
வெளிநாட்டில் மட்டுமே இந்த உலக சாதனை நடந்த நிலையில் இந்திய வரலாற்றில் முதல் முறையாக 370 கிலோ எடை கொண்ட காரை கண்ணன் அசாதாரணமாக 25 மீட்டர் தூக்கி நடந்து சென்று சாதனை படைத்துள்ளார். முன்னதாக கண்ணனின் இந்த சாதனை நிகழ்ச்சியை தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் மற்றும் அவரது ரசிகர்கள் கலந்து கொண்டு அவருக்கு உற்சாகத்தையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். மேலும் தான், தன்னைப் போன்று ஆர்வம் உள்ள இளைஞர்களை உருவாக்க வேண்டி, தான் செயல் பட்டா வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் படிக்க | எதிர்ப்புகளைத் தாண்டி வெற்றி வாகை சூடிய பதான்...
தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்கள் தலைமையில் சென்னை, அண்ணா அறிவாலயம், முரசொலிமாறன் வளாகத்தில் கழக மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், தாக்கல் செய்யப்பட உள்ள ஒன்றிய அர சின் 2023-24 நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடர் மற்றும் குடியரசுத் தலைவர் உரை குறித்து விவாதிக்கப்பட்டது. கழகத்தின் சார்பில் எடுத்து வைக்கப்பட வேண்டிய முக்கியப் பிரச் சினைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
கழகத் தலைவர் தமிழ்நாடு தொடர்பான முக்கிய பிரச் சினைகள் குறித்தும் - அகில இந்திய அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ள 2002ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் வன்முறை குறித்து ‘பிபி சி’ வெளியிட்ட ஆவணப் பட சர்ச்சை - இந்திய பங்குச் சந்தையில் அதானி குழுமத்தால் ஏற்பட்ட இழப்புகள் குறித்து வெளிவந்துள்ள அறிக்கை மற்றும் இந்திய அரசமைப்பின் அடிப்படை பண்புகளை மாற்றி அமைக்கும் முயற் சியாக, குடியரசு துணைத் தலைவர் உள்ளிட்ட சிலர் தெரிவிக்கும் தேவையற்ற கருத்துகள் குறித்தும், நாடாளுமன்றத்தில் உறுதியான விவாதங்களை எடுத்து வைத்திட, கழக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
அதேபோன்று, தமிழ்நாடு அரசால், ஒன்றிய அரசுக்கு எழுதப்பட்டுள்ள கடிதங்களின் நிலை குறித்தும் - முக்கியமாக
நீட் தேர்வுக்கு விலக்களிக்கும் மசோதாவிற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவது;
தமிழக மீனவர்கள்மீது இலங்கை அரசு தாக்குதல் நடத்துவது, கைது செய்வது, படகுகளை இலங்கை ராணுவம் பறிமுதல் செய்து நாட்டுடைமை ஆக்குவது;
சிறுபான்மையினர் மாணவர்களுக்கு 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை வழங்கி வந்த மெட்ரிக் கல்வி உதவித் தொகையை நிறுத்தியது;
மதுரை விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக அறிவிப்பது;
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது;
சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவது;
கால்நடைகளை கோமாரி நோயிலிருந்து தடுக்கும் தடுப்பூ சிகளைப் பெறுவது;
தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு அலுவலகங்கள் மற்றும் ஒன்றிய அர சின் பொதுத்துறை நிறுவனங்களில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பது;
என்.எல். சி. நிறுவனத்தின் வேலைவாய்ப்பில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவது;
இலங்கை தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச் சினைகள் குறித்தும் - அகில இந்தியாவில் எதிரொலிக்கும் பிரச் சினைகள் குறித்தும் இரு அவைகளிலும் குரல் எழுப்ப வேண்டுமென அறிவுறுத்துப்பட்டது.
-நப்பசலையார்
இதையும் படிக்க: பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்த வெளிநாட்டு தம்பதியினர்..!
செஞ்சியில் வெளிநாட்டு தம்பதியினர் பிளாஸ்டிக் குப்பைகளை சேகரிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் வரலாற்று சிறப்புமிக்க ராணிக்கோட்டை உள்ளது. இந்த கோட்டையில் உள்ள சிறப்பம்சங்களை பார்ப்பதற்காக தமிழ்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், ராணிகோட்டை மலை ஏறும் பாதையில் இருந்த பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்து மலை அடிவாரத்திலிருந்த குப்பை தொட்டியில் போட்ட வெளிநாட்டு தம்பதியினரின் வீடியோ பரவி வருகிறது.
தம்பதியனிரிடையே குழந்தை பிறப்புக்கு தடையாய் இருக்கும் பிரச்சனைகளை கண்டறிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொள்ள உள்ளதாக கன்னியாகுமரி மாவட்ட மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவ சங்க தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்ட மகளிர் மட்டும் மகப்பேறு மருத்துவ சங்கத்தில் 170 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த மருத்துவர்கள் கலந்து கொண்ட கருத்தரங்கு நாகர்கோவிலில் நடைபெற்றது. இதில் மகப்பேறு மருத்துவம் குறித்த நவீன சிகிச்சை முறைகள் குறித்து டாக்டர்களுக்கு விளக்கப்பட்டது. இந்த சங்கத்தின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட டாக்டர் நாராயணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், மருத்துவ செயல்பாடுகள் குறித்து தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலமாக பொதுமக்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது போன்ற நடவடிக்கைகளில் மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் சங்கத்தின் குறிக்கோளாக கொண்டுள்ளதாக குறிப்பிட்டார்.
ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் முடிவுகள் டெல்லி செங்கோட்டையில் எதிரொலிக்கும் என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தரப்பில் நியமிக்கப்பட்டுள்ள பகுதி பொறுப்பாளர்களுக்கு ஆலோசனை வழங்கினார் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தேர்தல் முடிவுகள் டெல்லி செங்கோட்டையில் எதிரொலிக்கும் எனத் தெரிவித்தார். மேலும் அதிமுகவுடன் எந்தெந்த கட்சிகள் கூட்டணி என்பது குறித்து இரண்டு நாட்களில் அறிவிக்கப்படும் எனவும் கூறினார்.
-நப்பசலையார்
இதையும் படிக்க: பதவியேற்ற பின் முதல் பயணம் இந்தியாவை நோக்கி....