குளமாக மாறிய பேருந்து நிலையம்... மதுரை பஸ் ஸ்டாண்டில் மக்கள் அவதி...

மதுரையில் பெய்த கனமழை காரணமாக, ஆங்காங்கே தண்ணீர் சூழ்ந்து குளம் போல காட்சியளிக்கிறது.

குளமாக மாறிய பேருந்து நிலையம்... மதுரை பஸ் ஸ்டாண்டில் மக்கள் அவதி...

மதுரை மாவட்டம் அனுப்பானடி பேருந்து நிலையம் மழை நீர் சூழ்ந்து குளம் போல காட்சியளிப்பதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். அனுப்பானடி பேருந்து நிலையம் தாழ்வான பகுதியாக இருப்பதால், மழை பெய்யும் நேரங்களில் அப்பகுதி தண்ணீர் முழுவதும் பேருந்து நிலையத்தில் தேங்குகிறது. இந்நிலையில் நேற்று பெய்த மழையால் பேருந்து நிலையம் முழுவதும் தண்ணீர் சூழ்ந்து கடல் போல காட்சியளிக்கிறது. இதனால் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். 

இதேபோல், மதுரை பைக்காரா பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் மழைநீர் புகுந்ததால், கட்டிடம் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த ஆரம்ப சுகாதார மையத்தில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். மேலும்,  மையத்தில் பல ஆண்டுகளாக கட்டிடத்தில் விரிசல் காணப்படுகிறது. இந்நிலையில், தற்போது மழை காரணமாக, சுகாதார நிலையத்தில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் கட்டிடம் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் நோயாளிகளும், பொதுமக்களும் அச்சத்தில் உள்ளனர்.