ராணிப்பேட்டை அருகே பரபரப்பு...! வயலுக்கு வைக்கோல் ஏற்றி வந்த டிராக்டர் தீப்பிடித்து எரிந்தது....!

ராணிப்பேட்டை அருகே பரபரப்பு...!  வயலுக்கு வைக்கோல் ஏற்றி வந்த டிராக்டர் தீப்பிடித்து எரிந்தது....!

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த புலிவலம் கிராமம் அருகில் நந்திமங்கலம் செல்ல வழிக்கு அருகில் நந்தகுமார் என்பவர். இவருக்கு சொந்தமான  வயலில்,  ராஜேந்திரன் என்பவருடைய ட்ராக்டரில் வைக்கோல் போர்  ஏற்றிக்கொண்டு வந்தனர். 

அப்போது, மேலே இருந்த மின் கம்பி ஒன்றோடு ஒன்று உரசியதால் மின் கசிவு ஏற்பட்டு டிராக்டர்  வைக்கோலுடன் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது.

 இதனை கண்ட ஓட்டுனர் ராஜேந்திரன் தப்பிக்க முயலும் பொழுது அவருடைய கால் எரிந்து நிலையில், அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பொதுமக்கள் அனுப்பி வைத்தனர்.

 பின்பு தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்து தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து வைக்கோலுடன் எரிந்து கொண்டிருந்த டாக்டரை அணைத்தனர். இதனால் புலிவலம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிக்க    } ராணிப்பேட்டையில் பைப் லைன் உடைந்து ... பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீண்...!