புத்தாடை, பட்டாசு, பலகாரம் உள்ளிட்ட பொருட்களை வாங்க....அலை அலையாய் குவிந்த மக்கள் கூட்டம்

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே இருக்கும் நிலையில் ,சென்னை தியாகராயநகர் பகுதியில் புத்தாடை, பொருட்கள் வாங்குவதற்காக மக்கள் கூட்டம் கூட்டமாக குவிந்தனர்.

புத்தாடை, பட்டாசு, பலகாரம் உள்ளிட்ட பொருட்களை வாங்க....அலை அலையாய் குவிந்த மக்கள் கூட்டம்

 இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சென்னை தி.நகர், பாரிமுனை, வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் குடும்பங்களுடனும், நண்பர்களுடனும் மக்கள் பொருட்கள் வாங்க குவிந்தனர்.

மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க சென்னை மாநகர காவல்துறை சார்பில் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து அதிக அளவில் பாதுகாப்பு ஏற்படுகளும் செய்யப்பட்டுள்ளது.

தி.நகர் ரங்கநாதன் தெருவில் மக்கள் ஊர்ந்து செல்லும் அளவிற்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. வண்ண வண்ண நிறங்களில் புதுரக ஜவுளி துணிகளும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடைகளுக்கு விற்பனைக்கு வந்துள்ளதால் மக்கள் மிக ஆர்வத்துடன் வாங்கினர்

பிரபல கடைகள் முதல் சாலையோர கடைகள் வரையிலும் அனைத்து இடங்களிலும் மக்கள் வெள்ளம் காணமுடிகிறது. சென்னையில் பல இடங்களில் கடைகள் இருந்தாலும் தி.நகரில் புதுரகங்கள், குறைந்த விலையில் வாங்க முடியும், தி.நகரில் குடும்பத்துடன் பொருட்கள் வாங்குவது மகிழ்ச்சி அளிப்பதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.