CINE JURIS CRICTIQUE போட்டி; பரிசுகளை வழங்கி கௌரவித்த கால்ஸ் குழும இயக்குனர்!

Published on

CINE JURIS CRICTIQUE போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற சட்ட கல்லூரி மாணவர்களுக்கு கால்ஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் வாசுதேவன் பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.

சென்னை தரமணியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைகழகத்தில் CINE JURIS CRICTIQUE போட்டிக்கான நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த போட்டியில் 4 சட்டதுறை பல்கலைகழகங்களை சேர்ந்த 32 அணிகள் கொண்ட 80க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கால்ஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் வாசுதேவன் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகவும் நடுவராகவும் கலந்து கொண்டு சிறப்பித்த மாலை முரசு தொலைக்காட்சியின் முதன்மை தலைமை ஆசிரியர் A அரவிந்த்குமார் மற்றும் இயக்குனர் சாந்தகுமார் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தனர் 

முதல் சுற்றில் குற்றம் 23, சாணி காதிதம், பொன்மகள் வந்தாள், ஜோக்கர் ஆகிய தமிழ் திரைப்படங்களை மையமாக கொண்டு படத்தில் சொல்லப்பட்டுள்ள சட்ட ரீதியான கருத்துகள்  சரி, தவறு என்பதை குறித்து போட்டியாளர்கள் விளக்கினர். இரண்டாம் சுற்றுக்கு தேர்வான போட்டியாளர்கள் கொடுக்கப்பட்ட பொதுவான தமிழ் திரைப்படங்கள் குறித்து விவாதித்தனர்.அதன் பின், இறுதி சுற்றுக்கு முன்னேறிய அணி நடுவரின் கேள்விக்கு பதில் அளித்த அணிக்கு மதிப்பெண் வழங்கப்பட்டது.

3 தகுதி சுற்று போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர் அணிக்கு முதல் பரிசு மற்றும் இரண்டாம் பரிசு வழங்கப்பட்டது.போட்டியில் பங்கேற்ற போட்டியாளர்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கி சிறப்பித்ததும் குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com