“கலெக்‌ஷன், கமிஷன், கமிஷ்னர்” - ஆணையர் லஞ்சம் பெறுவதாக ஊர் முழுக்க ஒட்டப்பட்ட போஸ்டர்..!

“கலெக்‌ஷன், கமிஷன், கமிஷ்னர்” -  ஆணையர் லஞ்சம் பெறுவதாக ஊர் முழுக்க ஒட்டப்பட்ட போஸ்டர்..!

திருவேற்காடு நகராட்சியில் கமிஷன், கலெக்சன், கமிஷ்னர் என நகராட்சி ஆணையர் லஞ்சம் வாங்குவதாக  ஒட்டப்பட்டுள்ள  போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

திருவேற்காடு நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இந்த நகராட்சியில் ஆணையராக ஜஹாங்கீர் பாஷா என்பவர் பதவி வகித்து வருகிறார். நகராட்சி ஆணையர் ஜகாங்கீர் பாஷா மீது பல்வேறு புகார்கள் இருந்து வருகின்றன. பொதுமக்களின் புகார்களை செவி கொடுத்து கேட்பதில்லை.சந்திக்க வருபவர்களை அவமதிப்பு செய்வது போன்ற  புகார்கள் இருந்து வந்தன.

அதேபோல், கவுன்சிலரை ஜாதிப்பெயரை கூறி திட்டயது, வட்டாட்சியருடன்  தகராறில் ஈடுபட்டது,சினிமா பட சூட்டிங்கில் வாக்குவாதம் செய்தது என இவர் மீதான குற்றச்சாட்டுகள் அடுக்கிக் கொண்டே போகலாம். அதேபோல் இவர் மீது திருவேற்காடு காவல் நிலையத்திலும் இதுவரை ஐந்துக்கும் மேற்பட்ட புகார்கள் கமிஷ்னருக்கு எதிராக  இருந்து வருகிறது.

நகராட்சி 10- வது வார்டு கவுன்சிலர் நளினி குருநாதன் அவரது கணவர் குருநாதன்  ஆணையர் ஜகாங்கீர் மாஷா தனது வார்டில் மக்கள்  பணி செய்ய லஞ்சம் கேட்பதாக பகிரங்கமாக குற்றச்சாட்டினார். அதேபோல் தன்னிடம் வாங்கிய 10 லட்சம் ரூபாய் லஞ்சப் பணத்தை திரும்பத் தர வேண்டும் என்று நகராட்சி ஆணையரிடமே மனுவை கொடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில், திருவேற்காடு நகராட்சியில் உள்ள 18 வார்டுகளிலும் நகராட்சி ஆணையர் ஜகாங்கீர் பாஷா மற்றும் டவுன் பிளான் ஆய்வாளர் விக்னேஸ்வரன் ஆகியோர் லஞ்சம் பெறுவதாக குற்றம் சாட்டி 18 வார்டுகளிலும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

 ‘கலெக்ஷன், கமிஷன் கமிஷ்னர்’, என அச்சிடப்பட்ட அதில் ஆணையர் மற்றும் டவுன் பிளானர் இருவரின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. இந்த போஸ்டர் திருவேற்காடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.

தன்னைப் பற்றி போஸ்டர் ஒட்டப்பட்டு இருப்பதை அறிந்த நகராட்சி ஆணையர் நகராட்சி ஊழியர்களை கொண்டு அந்த போஸ்டர்களை அகற்றி வருகிறார்.

இதையும் படிக்க   | ”மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் மிரட்டுகிறது” - அப்பாவு குற்றச்சாட்டு