விசில் போடு எக்ஸ்பிரஸில் வந்திறங்கிய சிஎஸ்கே ரசிகர்கள்...!

விசில் போடு எக்ஸ்பிரஸில் வந்திறங்கிய சிஎஸ்கே ரசிகர்கள்...!
Published on
Updated on
1 min read

தென் மாவட்டங்களைச் சேர்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் விசில்போடு எக்ஸ்பிரஸ் மூலம் சென்னை வந்தடைந்தனர். 

நடப்பு ஐபிஎல் தொடரில் 41 ஆவது லீக் போட்டியில் சென்னை - பஞ்சாப் அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடவுள்ளன. இந்த போட்டியை தென்மாவட்ட ரசிகர்கள் காணும் வகையில் போட்டி ஒன்றை நடத்தி ரசிகர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்கள் அனைவரும் சென்னை அணி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ள விசில்போடு எக்ஸ்பிரஸ் ரயிலில் அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்களுக்கான உணவு, தங்குமிடம் உள்ளிட்ட முழு செலவையும் சென்னை அணி நிர்வாகமே ஏற்றுள்ளது.

ஒவ்வொரு ஐபிஎல் போட்டியின் போதும் சிஎஸ்கே நிர்வாகம் மூலம் விசில் போடு எக்ஸ்பிரஸ் வழியாக ரசிகர்கள் வரும் நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக சென்னையில் போட்டிகள் நடைபெறாததால், தற்பொழுது மீண்டும் ரசிகர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். 

தோனி ஆட்டத்தை பார்ப்பதற்காகவும், சென்னை அணி கோப்பையை கையில் ஏந்தும் தருணத்தை பார்ப்பதற்காகவும் ஒவ்வொரு ரசிகர்களும் காத்திருப்பதாக ஒவ்வொரு போட்டியின் போதும் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றன.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com