சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து.. தாய், மகன் உயிரிழப்பு!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சாலையோர பள்ளத்தில் கார்  கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி தாய், மகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சாலையோர பள்ளத்தில் கார்  கவிழ்ந்து விபத்து.. தாய், மகன் உயிரிழப்பு!!

சென்னை மேடவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கீதா, இவரது மகன் ஹரி ஷங்கர் இவரது மனைவி ராஜேஸ்வரி மூவரும் ஆரணியில் நடைபெற்ற உறவினா் திருமணத்திற்கு சென்று விட்டு சென்னை நோக்கி காரில் வந்து கொண்டிருந்துள்ளனா்.

அப்போது, காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம்  அருகே வந்த கொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துகுள்ளனாது. இதில் ஹரி ஷங்கர் மற்றும் தாய் கீதா இருவரும் சம்பவ இடத்திலியே பரிதாபமாக உயிரிழந்துள்ளனா். மேலும் படுகாயமடைந்த ராஜேஸ்வரியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனா்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே  தளவாநாயக்கன் பேட்டை பகுதியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் கமலக்கண்ணன் இவரது மகள் ஸ்ரீநிதி,  இவா்  ஆதிபராசக்தி கல்லூரியில்  படித்து வருகிறார்.

இந்நிலையில், ஸ்ரீநிதி கல்லூரிக்கு செல்வதற்காக தனது தங்கை கார்த்தியாயினி  உடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, போளூர் அருகே சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராவிதமாக  எதிரே வந்த கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது, இதில் சகோதரிகள் இருவரும்  படுகாயமடைந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.