சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ.கேள்விக்கு சுகாதாரத்துறை அமைச்சர் பதில்...!

சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ.கேள்விக்கு சுகாதாரத்துறை அமைச்சர் பதில்...!

திருவள்ளுர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் புதியதாக இருதய சிகிச்சை பிரிவு அமைக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

2 நாள் விடுமுறைக்கு பின் இன்றைக்கு கூடியுள்ள தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஆய்வக வசதியுடன் இருதய பாதிப்பு சிகிச்சை பிரிவு தொடங்க அரசு நடவடிக்கை எடுக்குமா? என திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் கேள்வி எழுப்பினார்.

இதையும் படிக்க : சட்டசபைக்கு கருப்பு புடவையுடன் வந்த பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன்...!

இதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் 26 சிறப்பு பிரிவுகள் செயல்பட்டு வருவதாகவும், புதிதாக இருதய சிகிச்சை பிரிவு தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.