நடுரோட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்கள்...!

Published on
Updated on
1 min read

சென்னையில் இருவேறு இடங்களில் திடீரென கார் தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சூளைமேட்டை சேர்ந்த அங்கேஷ் என்பவர் தன்னுடைய சொந்த காரில் மதுரைக்கு புறப்பட்டுள்ளார். பச்சையப்பன் கல்லூரி அருகே சென்று கொண்டிருந்தபோது காரின் முன் பகுதியில் இருந்து புகை வருவதைக் கண்ட அங்கேஷ், வாகனத்தை நிறுத்திவிட்டு இறங்கியுள்ளார். அதன்பின் வாகனம் மளமளவென தீப்பிடித்து எரிந்துள்ளது. தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்துள்ளனர். 

இதேபோன்று, கோடம்பாக்கத்தை சேர்ந்த சபரி என்பவர், வெளியூர் செல்ல இருந்த தனது சகோதரரை சென்னை விமான நிலையத்திற்கு தனது காரில் அழைத்து சென்றார். அப்போது, பரங்கிமலை சுரங்கப்பாதையில் சென்றுகொண்டிருந்த போது காரின் முன்பக்கத்தில் இருந்து புகை வருவதைக் கண்ட சபரி, காரை நிறுத்திவிட்டு தம்பியுடன் கீழே இறங்கியுள்ளார். அதற்குள் தீ வேகமாக பரவி கார் முழுவதும் எரிந்தது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com