எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..!!

தேர்தல் அலுவலரின் காரை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..!!

தேர்தல் அலுவலரின் காரை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திய முன்னாள் அமைச்சர் எம். ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கரூர் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் ஊராட்சித் துணைத் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

இதனை எதிர்த்து அதிமுக முன்னாள் அமைச்சர் எம். ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட அக்கட்சி தொண்டர்கள் தேர்தல் அலுவலரின் காரை வழிமறித்து தர்ணா செய்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக தேர்தல் அதிகாரி மந்திராசலம் தாந்தோணிமலை காவல்நிலையத்தில் புகார் அளித்ததைத்தொடர்ந்து, சட்டவிரோதமாக அதிகாரியைத் தடுத்தல், அரசு ஊழியரைப் பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.