" காவிரி மேலாண்மை வாரியம் மெத்தனமாக செயல்படுகிறது" துரைமுருகன்  குற்றச்சாட்டு!

" காவிரி மேலாண்மை வாரியம் மெத்தனமாக செயல்படுகிறது" துரைமுருகன்  குற்றச்சாட்டு!

தமிழ்நாட்டிற்கு உரிய நீரை பெற்றுத்தரும் விவகாரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் மெத்தனமாக செயல்படுகிறது என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் குற்றம் சாட்டியுள்ளார்.

காவிரி மேலாண்மை ஆணைய  கூட்டம் இன்று நடைபெற உள்ள நிலையில் கோட்டூர்புரத்தில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன், நேற்றைய காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் தமிழகத்தில் குறுவை சாகுபடி பயிர்களை காப்பாற்ற விநாடிக்கு 24000 கன அடி நீர் வீதம் 10 நாட்களுக்கு திறந்து விட வேண்டும் என வலியுறுத்தபட்டதாக தெரிவித்தார்.

கர்நாடக அரசு 5000 கன அடி நீர் திறப்பதாக்கவும் காவிரி ஒழுங்கு முறை ஆணையம் 7000 கன அடி நீர் திறக்க பரிந்துரை செய்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நீதி மன்றத்தில் தமிழக அரசின் தரப்பு தேவையை வலியுறுத்துவோம் எனக் கூறிய அவர்,  காவிரி நீர் அதிகம் இருக்கும் போது எவ்வாறு பங்கீடு செய்ய வேண்டும் என்ற வரைமுறை உள்ளது. நீர் தட்டுப்பாடு உள்ள நேரத்தில் நீரை எவ்வாறு பங்கிட்டு கொள்ள வேண்டும் என்ற வரையறை இல்லை என தெரிவித்தார்.  

இவ்விவகாரத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் மெத்தனமாக செயல்படுவதாக குற்றம் சாட்டிய துரைமுருகன், இதனையும் நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் எடுத்து வைக்க இருப்பதாக தெரிவித்தார். மேலும் வறட்சியால் பயிர் பாதிக்கப்படால் மாற்று ஏற்பாடாக விவசாயிகளுக்கு காப்பீடு ஆகியவற்றின் மூலம் இழப்பீடு வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இதையும் படிக்க:வழியில் பள்ளம்; பாதையை மாற்றிய சந்திரயான்-3 ரோவர்!