காவிரியில் கழிவு நீர்...! கர்நாடக அரசுக்கு இறையன்பு கடிதம்...!!

காவிரியில் கழிவு நீர்...! கர்நாடக அரசுக்கு இறையன்பு கடிதம்...!!
Published on
Updated on
1 min read

காவிரியில் கழிவு நீர் அதிகளவில் கலப்பதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி கர்நாடக அரசுக்கு, தமிழக தலைமை செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், காவிரியில் நடப்பு ஆண்டு 2022 - 23ல் நீர் வழங்கும் காலத்தில், இதுவரை 658 டி.எம்.சி  நீர் தமிழகத்திற்கு கிடைத்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயித்த நீரளவை காட்டிலும், இந்த ஆண்டு 484 டி.எம்.சி  கூடுதல் நீர் வழங்கப்பட்டுள்ளது. மேலும் நீர் வழங்கும் தவணை காலம் முடிவதற்கு மே வரை அவகாசம் உள்ளது.

இந்நிலையில், பெங்களூரு நகரப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர், நேரடியாக காவிரி ஆற்றில் விடப்படுகிறது. இதனால், சுற்றுச்சூழல் பாதிப்பு அபாயம் ஏற்பட்டுள்ளது.  மேலும், காவிரி ஆற்றில் ஆங்காங்கே பச்சை நிறத்துடன், சாக்கடை நீர் ஓடுகிறது. இவ்வாறு முறைப்படி கிடைக்கும் நீரில் பெரும் பகுதி கழிவு நீராகவே உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

எனவே, காவிரியில் கழிவு நீர் கலப்பதை தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என கர்நாடக மாநில தலைமை செயலாளரை தமிழக தலைமை செயலாளர் இறையன்பு கேட்டுக்கொண்டுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com