காவிரி நீர் விவகாரம்; ஓ.பி.எஸ் கண்டனம்!

தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் தர மறுக்கும் கர்நாடக அரசிற்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கர்நாடக அரசின் மீது கண்டனம் தெரிவித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீதிமன்றம் உத்தரவையும், காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவையும் மதிக்காமல் தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய காவிரி நீரை தர மறுத்து வரும் கர்நாடக அரசிற்கு கண்டனம் தெரிவிப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிக்க : விஜய் ஆண்டனியின் “ஹிட்லர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது !!

மேலும் முதலமைச்சர் முக ஸ்டாலின் எதிர்வினை ஆற்றாதது ஏமாற்றத்தை அளிப்பதாக குறிப்பிட்டிருந்த அவர், மத்திய அரசு மற்றும் காங்கிரஸ் மேலிடம் மூலமாக அழுத்தம் கொடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டி முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அறிக்கையில்  வலியுறுத்தியுள்ளார்.