'சிமெண்ட் நாற்காலி' பேலன்ஸில் நிற்கும் "போஸ்ட் கம்பி".. அச்சத்துடன் பயணிக்கும் பொதுமக்கள்!!

கன்னியாகுமரி சங்குத்துறை கடற்கரைப் பகுதியில் சாய்ந்து விழும் நிலையில் உள்ள மின் கம்பத்தை மாற்றாமல் கயிறு கட்டி வைத்திருக்கும் சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது. 

'சிமெண்ட் நாற்காலி' பேலன்ஸில் நிற்கும் "போஸ்ட் கம்பி".. அச்சத்துடன் பயணிக்கும் பொதுமக்கள்!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள மீனவ கிராம பகுதியில் சங்குத்துறை பீச் அமைத்துள்ளது.

இங்கு நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து விடுமுறை நாட்களில் அதிக அளவில், மக்கள் குடும்பத்துடன் வந்து பொழுதை கழிப்பது வழக்கம். உள்ளூர் சுற்றுலா பயணிகளின் மட்டுமின்றி, வெளியூரில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளும் இந்த கடற்கரைக்கு வருவது வழக்கம்.

இந்நிலையில், இந்த கடற்கரை சாலையோரம் உள்ள மின் கம்பம் ஒன்று, முழுவதுமாக சேதமடைந்து,  சாலையில் விழும் நிலையில் உள்ளது. எந்தவித பிடிமானமும் இல்லாத அளவில் தேசமந்துள்ள மின் கம்பத்தை மாற்றாமல், அதனை ஒரு கயிறு மூலம் கட்டி நிற்க வைத்துள்ளனர். இந்த சாலையில் ஏராளமான மக்கள் நடந்தும், வாகனங்களிலும் சென்று வருகின்றனர்.

இந்த மின் கம்பத்தை பார்க்கும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே செல்கின்றனர். பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும், இந்த பகுதியில் இருக்கும் மின் கம்பத்தை, அசம்பாவிதம் நிகழும் முன்  உடனடியாக மாற்றித் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.