தமிழகம் மற்றும் புதுவையில் 2 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு!!

தமிழகம் மற்றும் புதுவையில் 2 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு!!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையின் ஒரு சில இடங்களில், இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

26 மற்றும் 27ம் தேதிகளில், குமரி, நெல்லை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் தமிழக கடலோரப்பகுதிகள், குமரி, மன்னார் வளைகுடா மற்றும் அதனையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசும் என்பதால், நாளை வரை மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.