வெப்ப சலனம் காரணமாக 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு...!

வெப்ப சலனம் காரணமாக 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு...!

வெப்ப சலனம் காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்காலில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்ப சலனம் காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோயம்புத்தூர், சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் உட்பட 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர் வீட்டில் 2வது நாளாக ஐடி ரெய்டு...!

சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28  டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.