4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலை மையம் எச்சரிக்கை...

4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலை மையம் எச்சரிக்கை...

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Published on

தமிழகத்தில் கடற்கரையையொட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்களில் இன்று ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனவும்,  புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அடுத்த 2 நாட்களுக்கு கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, செங்கல்பட்டு மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரளவு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும்,  நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com