நீலகிரி, கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. மீனவர்களுக்கு எச்சரிக்கை!!

நீலகிரி, கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நீலகிரி, கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..  மீனவர்களுக்கு எச்சரிக்கை!!

மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும் நாளையும் தமிழகம், புதுவையில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில்  ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னையில், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. இன்று குமரிக்கடல் பகுதி, மன்னார் வளைகுடா, தமிழக - ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.