வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீலகிரி, கோவை, திருவண்ணாமலை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழையும், டெல்டா மற்றும் மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.