தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு ...!

தமிழகத்தில்  இன்று மழைக்கு வாய்ப்பு ...!

தமிழகத்தில் இன்று சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், ஒரு சில மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான பெய்யக்கூடும் எனவும்  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் இடி, மின்னல்களுடன் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக நீலகிரி, தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், கரூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து, தருமபுரி, கிருஷ்ணகிரி,வேலூர், ராணிப்பேட்டை நாமக்கல், திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் கனமழைக்கு இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்ப உள்ளதாகவும் பின்னர் இது மூன்று முதல் நான்கு நாட்கள் வரை நீடிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் தற்போது 35 டிகிரி செல்சியஸ் வரை இருந்தவெப்பநிலை  கணிசமாகக் குறைந்து 27 டிகிரி செல்சியஸ் பதிவாகக் கூடும் எனவும் இரண்டு நாட்கள் வரை லேசான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.