5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலை மையம் எச்சரிக்கை...
நீலகிரி, கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை தெரிவித்துள்ளது.

மாமல்லபுரத்தில் உள்ள பிரியாணி கடையில் பிரியாணி சாப்பிட்ட 13 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உலக புகழ் பெற்ற சுற்றுலா தலமாக விளங்கும் மாமல்லபுரத்திற்கு தினந்தோறும் உள்ளூர் மற்றும் வெளி மாநிலம் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம், அப்படி மாமல்லபுரத்தை சுற்றிப் பார்க்க வரும் வெளி மாநிலம் மற்றும் வெளிநாடு சுற்றுலா பயணிகள் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதிகளில் தங்குவதும் அங்குள்ள கடைகளில் உணவருந்துவதும் வாடிக்கையான ஒன்று. இந்நிலையில் மாமல்லபுரத்தில் உள்ள நிஹால் ஆம்பூர் பிரியாணி கடையில் நேற்று மதியம் பிரியாணி சாப்பிட்ட 13 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் அருகில் உள்ள இரண்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கும் போது கெட்டுப்போன கோழி இறைச்சி பயன்படுத்தி சமைக்கப்பட்ட பிரியாணியை சாப்பிட்டதால் இந்த உபாதைகள் ஏற்பட்டதாக தெரிவித்தனர்.
மேலும் இது குறித்து சமூக அலுவலர் கூறுகையில், இந்த பிரியாணி கடை மீது ஏற்கனவே 8 மாதங்களுக்கு முன்பு இதேபோன்று புகார் வந்ததாகவும் இது குறித்து உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டும் இதுவரையிலும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் இந்த கடை மீண்டும் திறக்கப்பட்டு வழக்கம்போல் செயல்பட்டு வந்ததாகவும் தெரிவித்தனர். மேலும் பிரியாணி சாப்பிட்ட 13 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது என பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் ரகுபதிக்கு தகவல் தெரிவித்தும் இதுவரையில் எந்த விசாரணையும் நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவிக்கின்றனர்.
இதுபோன்று மக்கள் உயிரோடு விளையாடக்கூடிய சுகாதாரமற்ற முறையில் செயல்படும் கடைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
இதையும் படிக்க: தடையை மீறி போராட்டம்...கன்னட அமைப்பினரை கைது செய்த போலீசார்...!
ஆந்திர, தமிழக எல்லையில் உள்ள வனப்பகுதியில் மருத்துவக் கழிவுகள் கொட்டி சென்ற கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மருந்து கடை உரிமையாளரை பேரணாம்பட்டு வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகே உள்ள தமிழக ஆந்திரா எல்லையான பத்தலப்பல்லி வனப்பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காலாவதியான மாத்திரைகள், ஊசிகள் உள்ளிட்ட மருத்துவ கழிவுகளை கொட்டி விட்டு சென்றுள்ளனர். மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டது குறித்து சமூக வலைதளங்களில் வைரலானது.
இது குறித்து தகவலறிந்த வேலூர் மாவட்ட வன அதிகாரி கலாநிதி உனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பேரணாம்பட்டு வனத்துறையினர்க்கு உத்தரவிட்டார். இதனையடுத்து பேரணாம்பட்டு வனத்துறையினர் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட வனப்பகுதியில் சோதனை செய்தனர்.
மேலும் மருத்துவ கழிவுகளில் மருந்து சீட்டு கண்டெடுக்கப்பட்டது. உடனடியாக மருந்து சீட்டில் காணப்பட்ட செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு வனத்துறையினர் பேசி அந்த நபரை வனத்துறையினர் பேரணாம்பட்டு வனசரக அலுவலகத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த நபர் கர்நாடக மாநிலம் கே.ஜி.எப். அருகே உள்ள கோரமண்டல் பகுதியில் மருந்து கடை நடத்தி வரும் ராஜேந்திர பிரசாத் (48) என்றும் கடந்த 5 தினங்களுக்கு முன்பு மருத்துவ கழிவுகளை கொண்டு வந்து தமிழக ஆந்திரா எல்லையிலுள்ள பத்தலப் பல்லி வனப்பகுதியில் கொட்டி விட்டு சென்றுள்ளார் என்பதும், மருந்து சீட்டின் மூலம் பேரணாம்பட்டு வனத்துறையினரிடம் சிக்கியதும் தெரியவந்தது.
பத்தலப்பல்லி காப்புக் காட்டில் அத்துமீறி நுழைந்து வனவிலங்கள் பாதிக்கும் வகையில் மருத்துவ கழிவுகளை கொட்டியதாக மருந்து கடை உரிமையாளர் ராஜேந்திர பிரசாத்தை வனத்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிக்க: தடையை மீறி போராட்டம்...கன்னட அமைப்பினரை கைது செய்த போலீசார்...!
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் மாலை முதல் தொடர்ந்து காற்று, இடியுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
டெல்லி, மும்பை, பெங்களூரு, கோவா, கோவை, அபுதாபி, புனே, ராஞ்சி, ஐதராபாத், கொல்கத்தா உள்பட 10 விமானங்கள், பலத்த மழை பெய்ததால் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்து பறந்து கொண்டு இருந்தன.
வானிலை சீரானதும் வட்டமடித்து பறந்து கொண்டிருந்த விமானங்கள் ஒன்றின் பின் ஒன்றாக தரையிறங்க அனுமதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதுப்போல் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய டெல்லி, ஐதராபாத், அபுதாபி உள்பட 6 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. பலத்த காற்றுடன் மழை பெய்து கொண்டு இருந்தால் விமான சேவைகள் சற்று பாதிக்கப்பட்டதாக விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் அரசியல் கட்சிகளாக இல்லாமல் அவரவர் குடும்ப நலனுக்காக மட்டுமே பாடுபடுவதாக நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலம் பகுதியில், தாயே கடல் தாயே, தலைப்பில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்பொழுது பேசிய அவர், "கர்நாடகாவில் தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுத்து அனைத்து கட்சியும் ஒருங்கிணைந்து போராடுகின்றன. ஆனால் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் அரசியல் கட்சிகளாக இல்லாமல், அவரவர் குடும்ப நலனுக்காக மட்டுமே பாடுபடுகின்றனர்" என விமர்சித்துள்ளார்.
மேலும், "கர்நாடகாவில் தமிழக முதலமைச்சரை அவமரியாதை செய்கின்றனர், இதை ஒரு திமுக கட்சிக்காரர்கள் கூட கண்டனம் தெரிவிக்கவில்லை. நான் மட்டும்தான் கண்டனம் தெரிவித்துள்ளேன்" எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க || "அதிமுக ஆட்சியில் புதிய பேருந்துகளை வாங்கதால் பழைய பேருந்துகளை இயக்கவேண்டியுள்ளது" அமைச்சர் சிவசங்கர்!!
கடந்த ஆட்சியில் புதிய பேருந்துகள் வாங்கதால் பழைய பேருந்துகளை இயக்கும் நிலை உள்ளது சிதம்பரத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் பேட்டி.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அரசு போக்குவரத்து பணிமனையில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஓய்வெடுப்பதற்காக புதிய குளிரூட்டும் ஓய்வறை திறப்பு விழா, பணியின் போது இறந்த ஊழியர்களின் வாரிசுதாரருக்கு பணி ஆணை வழங்கும் விழா, மற்றும் பதவி உயர்வு ஆணை வழங்கும் விழா சிதம்பரம் போக்குவரத்து கழக பணிமனையில் நடந்தது.
அப்பொழுது பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், "15 ஆண்டுகள் ஓடிய பழைய பேருந்துகளை நிறுத்த வேண்டுமென மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி 1500 பேருந்துகள் நிறுத்தப்பட வேண்டி உள்ளது. அதற்காக புதிய பேருந்துகளை தற்பொழுது வாங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் பிறகு தேவையான இடங்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கை குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று உள்ளோம். விரைவில் அதற்கும் தீர்வு காணப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், "எந்த பகுதிக்கும் பேருந்து இயக்கப்படவில்லை என தெரிவித்தால் உடனடியாக பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆட்சியில் புதிய பேருந்துகள் வாங்கப்படாத காரணத்தினால் பழைய பேருந்துகளை வைத்து இயக்கும் சூழ்நிலை உள்ளது. தற்போது புதிய பேருந்துகள் வாங்க உள்ளோம். மேலும் 1500 பேருந்துகளை புதுப்பிக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக 200 பேருந்துகள் பணிகள் முடிந்து வந்துள்ளது. மற்ற பேருந்துகளும் பணிகள் முடிந்து விரைவில் பயன்பாட்டுக்கு வரும். ஆகவே இந்த பிரச்சனைகள் படிப்படியாக தீர்க்கப்படும்" என கூறியுள்ளார்.
இதையும் படிக்க || விடைபெறுகின்றது 2000 ரூபாய் நோட்டுகள்!!