தமிழகத்தில் இந்தந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.! வானிலை மையம் அறிவிப்பு.! 

தமிழகத்தில் இந்தந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.! வானிலை மையம் அறிவிப்பு.! 

தமிழகத்தில் கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

தென்மேற்கு பருவக்காற்று தீவிரமடைவதன் காரணமாக தமிழகத்தில் கன்னியாகுமரி, தென்காசி, தேனி, நீலகிரி, கோயம்புத்தூர், மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், திண்டுக்கல், ஈரோடு, திருநெல்வேலி மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. 

அதோடு, நாளை நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழைக்கும், திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கன மழைக்கும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

12-ம் தேதியன்று, நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், கோயம்புத்தூர், தேனி திண்டுக்கல் மாவட்டங்களில்  கன மழையும் பெய்யக்கூடும் என அறிவித்துள்ள வானிலை மையம், 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. 

தமிழ்நாட்டின் கடலோரப்பகுதிகளான, குமரிக்கடல், மன்னார் வளைகுடா மத்திய வங்கக்கடல் பகுதிகள் மற்றும் ஆந்திர கடலோரம், தெற்கு வங்கக்கடல்,  அந்தமான் கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 வேகத்திலும் இடைஇடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் அதனால், இன்று முதல் அடுத்த ஐந்து நாட்களுக்கு, மீனவர்கள் இந்தபகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.