டிசம்பர் 7...மக்களே உஷார்...இந்திய வானிலை எச்சரிக்கை...!

டிசம்பர் 7...மக்களே உஷார்...இந்திய வானிலை எச்சரிக்கை...!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருகிற டிசம்பர் 7 ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்திய வானிலை மையம் அறிவிப்பு:

தெற்கு அந்தமான் கடலில் நாளை உருவாகவுள்ள சூறாவளி சுழற்சியால், வருகிற டிசம்பர் 5 ஆம் தேதி தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், இது டிசம்பர் 7ஆம் தேதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: நீதிபதியை ஏமாற்ற நினைத்த திமுக கவுன்சிலர்...அதிரடி கைது!

டிசம்பர் 7 கனமழையா?:

தொடர்ந்து, இந்த தாழ்வு மண்டலமானது மேற்கு - வடமேற்கு திசையில் இருந்து நகர்ந்து வட தமிழ்நாடு - புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திரா கடற்கரைக்கு அருகில் உள்ள தென்மேற்கு வங்காள விரிகுடாவை டிசம்பர் 8-ஆம் தேதி வந்தடையும் என்பதால், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வருகின்ற டிசம்பர் 7 ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், அடுத்த 3 நாட்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.