தென்தமிழக மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு...!

தென்தமிழக மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு...!

தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு  உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும், வடதமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதையும் படிக்க : துருக்கியை விடாத நிலநடுக்கம்... பீதியில் மக்கள்...!

மேலும், சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.