வரும் 15 ஆம் தேதி வரை...தென்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு...சென்னை வானிலை தகவல்!

வரும் 15 ஆம் தேதி வரை...தென்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு...சென்னை வானிலை தகவல்!

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு தென்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, வருகின்ற 15 ஆம் தேதி வரை தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் அதனையொட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதையும் படிக்க : என்னை சிறையில் அடைக்கலாம்...மனஉறுதியை உடைக்க முடியாது - மணீஷ் சிசோடியா ட்வீட்!

அதேபோல், சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் முதல் 33 டிகிரி செல்சியசையொட்டி இருக்கும் என்றும் அறிவித்துள்ளது.