தமிழகத்தில் இன்று பல இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் பல இடங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று பல இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
Published on
Updated on
1 min read

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  இன்று முதல் வரும் 25ஆம் தேதி வரை தென் தமிழக கடலோர மாவட்டங்கள் டெல்டா மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடனும், காலை வேளையில் லேசான பனி மூட்டம் காணப்படும் என தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மழைப்பொழிவு ஏதும் பதிவாகாத நிலையில், மீனவர்களுக்கு எவ்வித எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com