தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு...மீனவர்களுக்கு எச்சரிக்கை...!

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு...மீனவர்களுக்கு எச்சரிக்கை...!

தமிழகத்தில் அடுத்த 5  நாட்களுக்கு  மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு  மையம் அறிவித்துள்ளது.

மெதுவாக நகரும் காற்றழுத்த தாழ்வு பகுதி:

தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி  நிலவுவதாகவும், இது அடுத்த இரண்டு தினங்களில் இலங்கை கடற்கரையை நோக்கி மெதுவாக நகரக்கூடும் எனவும் வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த 5 நாட்கள்:

இதன் காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில்  நாளை லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், அடுத்த 5 நாட்களுக்கு  தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் அறிவித்துள்ள வானிலை மையம், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவித்துள்ளது. 

இதையும் படிக்க: காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சைக்கிள் யாத்திரை... ரவீந்தர் ரெட்டி சொன்னது என்ன?

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

மன்னார் வளைகுடா, தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும்  அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால், அடுத்த 3 நாட்களுக்கு  மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.