தமிழ்நாட்டில் அடுத்த இரு தினங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு..!

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என கணிப்பு..!

தமிழ்நாட்டில் அடுத்த இரு தினங்களில்  மிதமான மழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தில் இன்று முதல் நாளை மறுநாள் வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வெயில் காலம் ஆரம்பித்தும் கூட அவ்வப்போது எதிர்பாரா வண்ணம் மழை பெய்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் அடுத்த இரு தினக்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்காலில் அடுத்த மூன்று நாட்களுக்கு மிதமானது முதல் லேசான மழை பெய்யும் என்றும், 18-ம் தேதி வறண்ட வானிலையே நிலவும் எனவும் கூறப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.