கோடை வெயிலுக்கு ரெஸ்டா...சென்னை வானிலை மையம் சொன்ன தகவல்...!

கோடை வெயிலுக்கு ரெஸ்டா...சென்னை வானிலை மையம் சொன்ன தகவல்...!

தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோடை வெயில் வெளுத்து வாங்கி வரும் நிலையில், கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ள சென்னை வானிலை மையம், தென் இந்திய பகுதிகளில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: வெறிச்சோடிய திருச்சி மாநாடு...ஓபிஎஸ்-க்கு திருப்புமுனையாக அமையுமா?

மேலும்,  இன்று ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 11 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவித்துள்ளது.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், அதிகபட்சமாக 36 டிகிரி வெப்பநிலை பதிவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.