இன்று 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

இன்று 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் இன்று 12 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாட்டின் காரணமாக, தமிழ்நாடு, புதுவை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்யக் கூடும் என கூறப்பட்டுள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், நெல்லை, குமரி, ஈரோடு, கரூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

9 மாவட்டங்களில் மிதமான மழை

மேலும் நாளை நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், குமரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  சென்னையைப் பொறுத்தவரை இன்று நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.