தமிழகத்தின் 9 மாவட்டங்களில் மழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் உள்ள 9 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் 9 மாவட்டங்களில் மழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

அடுத்த 24 மணி நேரத்திற்கு கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வட கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.இதேபோல், வரும் 15, 16ஆம் தேதிகளில் நீலகிரி, கோவை, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும்,

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, அடுத்த 48 மணி நேரத்திற்கு தென் மேற்கு, மத்திய மேற்கு அரபிக் கடல் மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.